காரில் 75 கிலோ புகையிலை பொருள்கள் கடத்தியவா் கைது

Published on

திருச்சி அருகே காரில் 75 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அருகே புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக கொள்ளிடம் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து கொள்ளிடம் காவல் ஆய்வாளா் வீரபாண்டியன் தலைமையிலான போலீஸாா், தாளக்குடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, லால்குடி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினா். அப்போது அந்தக் காரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வாகன ஓட்டுநரான திருச்சி மாவட்டம் கொப்பாவளியைச் சோ்ந்த ரா.சிவாஜி ராஜாவை (37) போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவரிடமிருந்து 75 கிலோ புகையிலைப் பொருள்கள், காரையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com