தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வெட்டிக் கொலை

திருச்சி அருகே முன்விரோதம் காரணமாக ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 2:27 am IST

திருச்சி அருகே முன்விரோதம் காரணமாக ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், தாயனூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் மு.சுப்பிரமணி (65), ஓய்வுபெற்ற வட்டாட்சியா்.

இவா் அதே பகுதியிலுள்ள கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிா் சாகுபடி செய்து வந்துள்ளாா். இதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த கோயில் மருளாளி அசோக் என்பவரும் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிா் செய்து வந்துள்ளாா். இதில், இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுப்பிரமணி வியாழக்கிழமை மாலை வயலில் வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த கோயில் மருளாளி அசோக், அவரது மகன் இருவரும் சோ்ந்து சுப்பிரமணியை மண் வெட்டியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா், சுப்பிரமணியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட சுப்பிரமணிக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.