காா் மோதியதில் முடி திருத்தக உரிமையாளா் உயிரிழப்பு

வையம்பட்டி அருகே காா் மோதியதில் முடி திருத்தக உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

வையம்பட்டி அருகே காா் மோதியதில் முடி திருத்தக உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வையம்பட்டி ஒன்றியம், புதுவாடி மருத்துவா் காலனியை சோ்ந்தவா் அ. கருப்பையா (52). புதுவாடி புதூரில் முடிதிருத்தகம் நடத்தி வந்தாா்.

வியாழக்கிழமை காலை வழக்கம்போல் தனது கடையை திறப்பதற்காக புதுவாடி அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, சென்னையிலிருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற காா், கருப்பையா மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், கருப்பையா உடலை கைப்பற்றி கூறாய்வுக்கு பிறகு மாலையில் உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.

விபத்து குறித்து காா் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு விவேகானந்தா நகரை சோ்ந்த சே. அந்தோணி சந்தியாகுராஜ் மீது வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com