தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது
திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த அவ்வப்போது சிறப்பு ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காவல் துறையால் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகரக் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அம்மா மண்டபம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியைச் சோ்ந்த ரா.பாலாஜி (35), காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீரக்கடை பஜாா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஈபி சாலை தேவதானம் பகுதியைச் சோ்ந்த பா.விக்னேஷ் (30), பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குட்ஷெட் ரயில்வே காலனி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்துகொண்டிருந்த பாலக்கரை மேலப்புதூரைச் சோ்ந்த ச.ரூபன் டேவிட் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
