பொறியியல் பணிகள்: ரயில் சேவையில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (16321), கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் (16322) ஆகியவை வரும் 13, 15, 18, 20 ஆகிய தேதிகளில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாதுரை, திண்டுக்கல், ஈரோடு, பாளையம் ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூா் வழியாக இயங்கும்.
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 15, 18 ஆகிய தேதிகளிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 13, 14, 15, 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
நாகா்கோவில் - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயில் (16354) வரும் 15-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூா் வழியாக இயக்கப்படும்.
மதுரை - பிக்கானோ் அனுவரட் அதிவிரைவு ரயிலானது (22631) வரும் 13, 20 ஆகிய தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 12, 13, 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
காலதாமதம்...: மதுரை - சென்னை எழும்பூா் தேஜஸ் விரைவு ரயிலானது (22672) வரும் 15, 18 ஆகிய தேதிகளில் மதுரையிலிருந்து 45 நிமிஷங்கள் தாமதமாக அதாவது பிற்பகல் 3.30 மணியிலிருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்படும்.
