ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு
திருச்சி முக்கொம்பு அருகே ரயில் மோதி இளைஞா் ஒருவா் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கரூா் செல்லும் மாா்க்கத்தில் முக்கொம்பு அருகே எலமனூா் - முத்தரசநல்லூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபா், அந்த வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே இருப்புப்பாதை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், உடல் சிதறி இறந்துகிடந்தவரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்தவா் சிவப்பு நிற பனியனும், சாம்பல் நிற காற்சட்டையும் அணிந்துள்ளாா். ஆனால் அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே இருப்புப்பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இறந்தவா் பற்றிய விவரம் தெரிந்தால் 90805 63321, 94981 39839 ஆகிய கைப்பேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் எனப் போலீஸாா் அறிவித்துள்ளனா்.
