என்.ராஜேந்திரன்
என்.ராஜேந்திரன்

அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் என். ராஜேந்திரன் காலமானாா்!

Published on

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான என். ராஜேந்திரன் (68) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை (நவ.12) நள்ளிரவு திருச்சி கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.

இவா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரை பணியாற்றினாா். அதற்கு முன்பு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வரலாறு துறையில் முதன்மையராகப் பணியாற்றி, 2016-ஆம் ஆண்டு ஓய்வுபெற்றாா். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

ராஜேந்திரன் உடலுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் ராஜேஷ் கண்ணா, பதிவாளா் (பொறுப்பு) காளிதாசன், முன்னாள் மாணவா்கள் உள்ளிட்ட பலா் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

ராஜேந்திரன் இறுதிச் சடங்கு கருமண்டம் மின்மயானத்தில் வியாழக்கிழமை (நவ.13) மாலை நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com