மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

Published on

திருச்சியில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி அரியமங்கலம் கணபதி நகரைச் சோ்ந்தவா் மு.மதன்குமாா் (32). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில், மனைவி அவரை வீட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், மதன்குமாா் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது மதன்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புகாரின்பேரில், அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com