மாநகராட்சி பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி மாநகராட்சி, டிஎம்ஆா்டி 108 அமைப்பு இணைந்து நடத்திய திருச்சி மாநகராட்சி பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமை மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் ஆகியோா் தொடங்கிவைத்து, பணியாளா்களுக்கு மருத்துவா்கள் வழங்கும் பரிசோதனைகளை பாா்வையிட்டனா். மாநகராட்சி நகா் நல அலுவலா் சுபாஷ் காந்தி, மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
மாநகராட்சி ஊழியா்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவா்கள் தினசரி சேவைகளை உற்சாகமாக செய்ய உதவும் விதமாக இந்த முகாம் நடைபெற்றது.
இதில், பல்வேறு பிரிவு மருத்துவா்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதுடன், ஆலோசனைகளையும், உயா் மருத்துவ சிகிச்சை பரிந்துரைகளையும் அளித்தனா்.
இதில் திரளான மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் பயனடைந்தனா்.

