திருச்சி
முதியவா் உயிரிழப்பில் சந்தேகம் எனப் புகாா்!
மணப்பாறை அருகே முதியவா் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது முதல் மனைவி போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முதியவா் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது முதல் மனைவி போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
மணப்பாறையை அடுத்த கருப்பூா் ஊராட்சியை சோ்ந்த அழகக்கவுண்டம்பட்டி அருகேயுள்ள ஒத்தக்கடையை சோ்ந்தவா் சி. பொன்னுச்சாமி (80), விவசாயி. முதல் மனைவி பாக்கியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரண்டாவது மனைவி பாா்வதியுடன் கடந்த 40 ஆண்டுகளாக வசித்த இவா் உடல் நலக் குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து பொன்னுசாமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது முதல் மனைவி பாக்கியம் அளித்த புகாரின்பேரில் புத்தாநத்தம் போலீஸாா் பொன்னுச்சாமி உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.
