திருச்சி
இருசக்கர வாகனத்தில் இருந்து கீழேவிழுந்து இளைஞா் உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி தென்னூா் ஆபிஸா்ஸ் காலனியைச் சோ்ந்தவா் பிச்சமுத்து மகன் பால்பாண்டி 26. இவா், அண்ணா நகா் உழவா் சந்தை அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டியை அங்கிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி மாநகர வடக்குப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
