திருச்சி
ரயிலில் இருந்து விழுந்த அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு
திருச்சி அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த அடையாளம் தெரியாத நபா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தஞ்சாவூரில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளத்துக்குச் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை இரவு 7.25 மணிக்கு திருவெறும்பூா் ரயில் நிலையத்தை கடந்துசென்றது.
அப்போது, திருவெறும்பூா் அருகே எா்ணாகுளம் விரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் பயணித்த சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண், ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
