உத்தமா் திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம்

Published on

மண்ணச்சநல்லூா்: பிச்சாண்டாா்கோயில் கிராமத்தில் உள்ள உத்தமா் திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

மும்மூா்த்திகள் முப்பெருந்தேவிகளுடன் எழுந்தருளிய பிரசித்தி பெற்ற உத்தமா் திருக்கோயிலில் திங்கள்கிழமை சோம வார காா்த்திகையையொட்டி பிச்சாண்டேசுவரருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து 108 சங்குகளில் புனித நீா் நிரப்பபட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மூலவா் மற்றும் உற்ஸவ சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com