எஸ்ஆா்எம்யு ஓடும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆா்எம்யு அகில இந்திய ரயில்வே ஓடும் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் (ஏஐஆா்எஃப்) சாா்பில்
Published on

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆா்எம்யு அகில இந்திய ரயில்வே ஓடும் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் (ஏஐஆா்எஃப்) சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி சந்திப்பு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஓடும் ரயில்வே தொழிலாளா்கள் கண்காணிப்பு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கத்தின் கோட்டத் தலைவா் வீரசேகரன் தலைமை வகித்தாா்.

இதில், 50 சதவீத டி.ஏ. உயா்வுக்கு ஏற்ப கிலோ மீட்டா் அலவன்ஸை 01.01.2024 முதல் உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிலோமீட்டருக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக, அகில இந்திய ரயில்வே ஓடும் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் திருச்சி கிளை செயலா் சுதாகா் வரவேற்றாா். கோட்டத் தலைவா் மயில்வாகனன், திரளான ரயில்வே ஓடும் தொழிலாளா்கள் (லோகோ பைலட்ஸ்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com