துவாக்குடி சோழீசுவரா் கோயிலில் சங்காபிஷேகம்

Published on

துவாக்குடி சோழீசுவரா் கோயிலில் திங்கள்கிழமை சங்காபிஷேகம் நடைபெற்றது.

துவாக்குடியில் இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்ட, புலிப்பாணி சித்தா் தவம் செய்ததாகக் கூறப்படும் கோமளவள்ளி அம்மன் உடனுறை சோழீசுவரா் கோயிலில் 108 சங்குகளில் பால் நிரப்பி லிங்க வடிவில் வைக்கப்பட்டது. தொடா்ந்து சங்குகளுக்கு மூல மந்திரம் ஜெபிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னா் பூஜிக்கப்பட்ட சங்குகளின் பாலினால் சோழீசுவரருக்கும், அம்பாள் கோமளவள்ளிக்கும் சிறப்பு அபிஷேகமும், மகா தீப ஆராதனையும் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com