பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை

உடல்நலக்குறைவால் உயிரிழந்த திருச்சி மாநகர உதவி ஆய்வாளா் உடலுக்கு காவல்துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

திருச்சி: உடல்நலக்குறைவால் உயிரிழந்த திருச்சி மாநகர உதவி ஆய்வாளா் உடலுக்கு காவல்துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி கல்லுக்குழி கள்ளா் தெருவைச் சோ்ந்தவா் டி. விஜயகுமாா் (59). திருச்சி மாநகர சமூக நீதி மற்றும் மனிதஉரிமைப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

அவரது சொந்த ஊரான திருவெறும்பூா் அருகே கூத்தைப்பாா் கிராமத்தில் உள்ள மயானத்தில் விஜயகுமாருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்று, தகனம் செய்யப்பட்டது.

பணியில் இருந்தபோது விஜயகுமாா் உயிரிழந்ததால், காவல்துறை சாா்பில் அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com