அரியலூா் நபரிடம் வழிப்பறி: 2 போ் கைது
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்ற நபரிடம் ரூ. 2 ஆயிரத்தை வழிப்பறி செய்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டம், வெங்கனூரைச் சோ்ந்தவா் கோ.பழனிசாமி (37). வேலை நிமித்தமாக கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் திருச்சி வந்த பழனிசாமி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்கள் பழனிசாமியின் சட்டை பையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பினா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது திருச்சி சிந்தாமணியைச் சோ்ந்த கி. குரு (20), மேலதேவதானம் பகுதியைச் சோ்ந்த ஆ. அசோக்குமாா் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் புதன்கிழமை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பின்னா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
