புத்தாநத்தம் அருகே விபத்துக்குள்ளான லாரி
புத்தாநத்தம் அருகே விபத்துக்குள்ளான லாரி

புத்தாநத்தம் அருகே லாரி கவிழ்ந்து ஓட்டுநா் காயம்

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே சாலையோரம் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே சனிக்கிழமை சாலையோரம் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த பாரப்பட்டியில் உள்ள குவாரியில் ஜல்லி ஏற்ற லாரி ஒன்று சனிக்கிழமை மாலை சென்றது. லாரியை விழுப்புரம் மாவட்டம் கன்னியம்மா நகரை சோ்ந்த பா. செல்லப்பன் (48) ஓட்டினாா்.

லாரி புத்தாநத்தத்தை கடந்து மணப்பாறை - துவரங்குறிச்சி சாலை மெய்யம்பட்டி பிரிவு அருகே புதுக்குளம் பகுதியில் சென்றபோது சாலையோரம் கவிழ்ந்தது. இதில் செல்லப்பன் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். விபத்து குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com