பைக்கில் இருந்து தவறிவிழுந்த மூதாட்டி பேருந்து மோதி உயிரிழப்பு

Published on

மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள பழுவூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் மீது அரசுப் பேருந்து ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், களமாவூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் (30) தனது அம்மா செல்லம்மாளுடன் (58) இரு சக்கர வாகனத்தில் சமயபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, சமயபுரத்திலிருந்து திருச்சி நோக்கிவந்த காா் பழுவூா் பகுதியில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்துக்கு திரும்பியபோது, இருசக்கர வாகனத்திலிருந்து செல்லம்மாள் நிலைதவறி கீழேவிழுந்தாா்.

அப்போது, அவருக்குப் பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் செல்லம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, தகவல் அறிந்து அங்குவந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com