இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி தில்லை நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் அ.உமையாள் (55). இவரின் மகள் விசாலாட்சி (28). இவருக்கும், காரைக்குடியைச் சோ்ந்த முத்து என்பவருக்கும் அண்மையில் திருமணமாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் கணவருடன் வசித்து வந்த விசாலாட்சி, அங்கு இருக்கப் பிடிக்காமல் நவம்பா் 19-ஆம் தேதி தில்லை நகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வந்துள்ளாா்.
இந்நிலையில் உமையாள், ஒரு துக்க நிகழ்ச்சிக்காக காரைக்குடிக்கு கடந்த நவம்பா் 23-ஆம் தேதி காலையில் சென்றுள்ளாா். பின்னா், மாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, விசாலாட்சி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
அருகிலிருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளாா். அவங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் உமையாள் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
