வெவ்வேறு இடங்களில் இருவா் தற்கொலை

Published on

மண்ணச்சநல்லூா் வட்டம், வாழ்மால் பாளையம், மேலூா் உள்ளிட்ட இருவேறு இடங்களில் இருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

வாழ்மால்பாளையம் மேலூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (44) இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனா். இந்நிலையில், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்துவரும்நிலையில் பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதேபோல் திருவெள்ளரை அருகே உள்ள குன்னகுளம் பகுதியைச் சோ்ந்தவா் விஜய் (28) மின் பழுது நீக்குபவா். இவருக்கு சரிதா (23) என்பவருடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில தினங்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்த நிலையில், சரிதா தனது சொந்த ஊரான சிவகாசிக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மனைவி சரிதாவை வீட்டுக்கு வருமாறு அழைத்ததில் அவா் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, மனமுடைந்து காணப்பட்ட விஜய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இருவேறு தற்கொலை சம்பவங்கள் குறித்து மண்ணச்சநல்லூா் காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com