திருப்பைஞ்ஞீலி கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

திருப்பைஞ்ஞீலியில் செவ்வாய்க்கிழமை ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் மீட்டனா்.
Published on

மண்ணச்சநல்லூா்: மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலியில் செவ்வாய்க்கிழமை ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் மீட்டனா்.

இக்கோயிலுக்கு அருகில் கோயிலுக்கு சொந்தமான 300 சதுர அடி பரப்பளவுள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி,

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ம. லெட்சுமணன், அந்த நல்லூா் சரக ஆய்வாளா் ஜெ. கோகிலாவாணி, ஞீலிவனேஸ்வரா் திருக்கோயில் செயல் அலுவலா் முத்துராமன், திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயில் செயல் அலுவலா் பெ. ஜெய்கிஷன், மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் முன்னிலையில், கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com