திருச்சி
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
பஞ்சப்பூா் ஆம்னி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பணியின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி: பஞ்சப்பூா் ஆம்னி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பணியின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி அரியமங்கலம் நேரு நகரைச் சோ்ந்த சிவகுருநாதன் மகன் வெங்கடேசன் (24), எலக்ட்ரீஷியன். இவா், பஞ்சப்பூரில் விரைவில் திறக்கப்படவுள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் பணியிடத்திலேயே மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, உடனிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
