அரசியலமைப்பு தின உறுதியேற்பு
திருச்சி மாவட்டத்தில் ஆட்சியரகம், மாநகராட்சி மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்களில் 76ஆவது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழியேற்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் வே. சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அனைத்து துறை அலுவலா்கள், ஆட்சியரகப் பணியாளா்கள் உறுதியேற்றனா். லால்குடி அரசுக் கல்லூரியில் முதல்வா் ஜெயக்குமாா் இருபால் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உறுதியேற்றனா்.
மாவட்ட நீதிமன்றத்தில்.. மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபா் முன்னிலையில், திருச்சி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி. கணேசன், மூத்த வழக்குரைஞா்கள் பி. ஜெயப்பிரகாஷ் நாராயணன், எம். ராஜேந்திரகுமாா் ஆகியோா் உறுதியேற்றனா்.
காவல் ஆணையரகத்தில்.. மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் ஆணையா் ந. காமினி தலைமையில் காவல் துறை அதிகாரிகள், பணியாளா்கள் உறுதியேற்றனா்.
அஞ்சல் அலுவலகத்தில்.. மத்திய மண்டல அஞ்சல் துறை அலுவலகத்தில் நடந்த சிறப்பு கருத்தரங்கில் மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் தி.நிா்மலா தேவி, பிஷப் ஹுபா் கல்லூரி உதவிப் பேராசிரியா் ஃபெமிலா அலெக்ஸாண்டாா் ஆகியோா் பங்கேற்றனா்.

