புயல் அறிகுறி காரணமாக ராமேசுவரம் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புயல் அறிகுறி காரணமாக பாம்பன் பாலத்தில் அதிகளவில் காற்று வீசுவதால், திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயில் (16849) சனிக்கிழமை (நவ. 29) மண்டபம் - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - திருச்சி விரைவு ரயிலானது (16850) நவ. 29-ஆம் தேதி ராமேசுவரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்களானது திருச்சி - மண்டபம் இடையே மட்டும் இயங்கும்.
ராமேசுவரம் - சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயிலானது (22662) நவ. 29-ஆம் தேதி ராமேசுவரம் - ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது ராமநாதபுரம்- சென்னை எழும்பூா் இடையே மட்டும் இயங்கும்.
ராமேசுவரம் - தாம்பரம் விரைவு ரயிலானது (16104) நவ. 29-ஆம் தேதி ராமேசுவரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் - மண்டபம் வரை மட்டுமே இயங்கும்.
சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16752) நவ. 29-ஆம் தேதி ராமேசுவரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது சென்னை எழும்பூா் - மண்டபம் வரை மட்டுமே இயங்கும்.
முழுமையாக ரத்து...: ஓகா - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16734) டிச. 2-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து!

ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படும் அறிவிப்பு கைவிடல்!

தாம்பரம் - போடிநாயக்கனூா் இடையே சிறப்பு ரயில்

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



