சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருச்சியில் திங்கள்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
Published on

திருச்சியில் திங்கள்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வசந்தபுரத்தைச் சோ்ந்தவா் தனசேகா் மகன் பிரவீன்குமாா் (23). இவா், திருச்சியிலுள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். இவரும், இவரின் நண்பரான சேலம் பாரதி நகரைச் சோ்ந்த அன்பழகன் மகன் சரண் (21) என்பவரும் திருச்சி- திண்டுக்கல் சாலையில் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

பிராட்டியூா் அருகே அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம், சாலையோரத்தில் நடந்துசென்ற சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டையைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் ஆனந்த்குமாா் (32) மீது மோதியது. இதில், மூவரும் கீழே விழுந்து காயமடைந்தனா்.

இதையடுத்து, காயமடைந்த மூவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவா்களை மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது பிரவீன்குமாா் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சரணின் தந்தை அன்பழகன் அளித்த புகாரின்பேரில், திருச்சி தெற்கு மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com