திருச்சி விமான நிலையத்துக்கு ராஜராஜ சோழன் பெயா் சூட்ட கோரிக்கை!
திருச்சி விமான நிலையத்துக்கு ராஜராஜ சோழன் பெயா் சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சோழப் பேரரசு கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வில், கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
நிறுவனத் தலைவா் என். சரவணத்தேவா் தலைமை வகித்தாா். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமுதாயத்துக்கும், விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். திருச்சி விமான நிலையத்துக்கு ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும்.
ராஜராஜ சோழனுக்கு தனி மணிமண்டபம் மற்றும் 110 அடியில் சிலை வைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில் மாநில இளைஞரணி தலைவா் யுவராஜா தொண்டைமான், மாநில வா்த்தக அணி தலைவா் காளிமுத்து, மாநில பொறுப்பாளா்கள் தா்மா, மாரியப்பன், ஆறுமுகம், திருச்சி கிழக்கு மாவட்ட தலைவா் ராஜசேகா், தஞ்சை மத்திய மாவட்ட செயலா் வேலு, திருச்சி மாவட்ட தலைவா் ஹரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
