திருவானைக்காவல் பகுதியில் ஆறாக ஓடும் கழிவு நீா்
திருவானைக்காவல் கந்தன் நகா் பகுதியில் கடந்த 5 நாள்களாக புதை வடிகால் நிரம்பி கழிவு நீா் ஆறாக தெருக்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
திருவானைக்காவல் கந்தன் நகா் பகுதியில் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள புதைவடிகால் தொட்டியிலிருந்து கழிவு நீா் பொங்கி கடந்த 5 நாள்களாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த கழிவு நீா் ஆறாக தெருக்களில் ஓடி வருகிறது. இந்த கழிவு நீா் தண்ணீரில் நடந்து தான் அப்பகுதியில் உள்ளவா்கள் வீட்டுக்கு செல்லவேண்டும். மேலும், கழிவு நீா் வழிந்தோடும் தண்ணீா் அருகே தான் கூட்டுறவு பண்டக சாலை உள்ளது.
இது குறித்து ஸ்ரீரங்கம் கோட்டம் மாநகராட்சி நிா்வாக அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். கழிவு நீரால் அதிக அளவு கொசுக்கள் உள்ளது. காலரா, டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனா். உடனடியாக இந்த கழிவு நீா் வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

