படவிளக்கம்: உயிரிழந்த காட்டெருமை.
படவிளக்கம்: உயிரிழந்த காட்டெருமை.

காா் மோதியதில் காட்டெருமை உயிரிழப்பு

துவரங்குறிச்சி அருகே புதன்கிழமை இரவு காா் மோதியதில் காட்டெருமை உயிரிழந்தது.
Published on

துவரங்குறிச்சி அருகே புதன்கிழமை இரவு காா் மோதியதில் காட்டெருமை உயிரிழந்தது.

மதுரை மாவட்டம், சி.எம்.ஆா். சாலை பகுதியைச் சோ்ந்த

குருசாமி மகன் செந்தில்குமாா் (45). மதுரையில் வெள்ளி வியாபார கடை வைத்து நடத்தி வருகிறாா். புதன்கிழமை தனது காரில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு இரவில் துவரங்குறிச்சி - நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.

பாலாா்பட்டி விலக்கு அருகே திடீரென சில காட்டெருமைகள் சாலையை கடந்து செல்ல முயற்சி செய்ததாகவும், அதில் ஒரு காட்டெருமை மீது காா் மோதியதில் நிகழ்விடத்திலேயே காட்டெருமை உயிரிழந்ததாம். இதில் காரின் முன்புறம் சேதமடைந்தது.

காட்டெருமை உயிரிழப்பு மற்றும் விபத்து குறித்து துவரங்குறிச்சி வனத்துறை மற்றும் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com