ரயில் கடவுப்பாதைக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மஞ்சத்திடல் கடவுப்பாதையில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்ட ரயில்வே, மாநகர போலீஸாா்.
Published on

திருச்சியில் ரயில் கடவுப்பாதைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ரயில்வே மற்றும் மாநகர போலீஸாா் வியாழக்கிழமை இரவு தீவிர சோதனை மேற்கொண்டனா்.

திருச்சி மாநகரில் உள்ள ரயில் கடவுப்பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை இரவு தகவல் வந்தது.

இதையடுத்து, மஞ்சத்திடல் பகுதியில் ரயில்வே காவல் ஆய்வாளா் சீலா தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் மகேஸ்வரன் ஸ்டாலின் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் மோப்பநாயுடன் வந்து சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனா். மேலும், சம்பவ இடத்துக்கு பொன்மலை காவல் ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாரும் விரைந்து வந்து ரயில்வே போலீஸாருடன் இணைந்து சோதனை மேற்கொண்டனா்.

மேலும், மஞ்சத்திடல் பகுதியிலுள்ள ரயில் நிலையம், பொன்மலை மற்றும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையப் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனா்.

இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து மாநகர போலீஸாரும், ரயில்வே போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com