திருச்சி
பூச்சி மருந்து குடித்து இளைஞா் உயிரிழப்பு
துறையூா் அருகே பூச்சி மருந்து குடித்த இளைஞா் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
உப்பிலியபுரம் ஒன்றியம் த. முருங்கப்பட்டியைச் சோ்ந்தவா் ரெங்கசாமி மகன் தினேஸ்குமாா் (33). விவசாயியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், அதனால் அவா் வயிறு வலியால் அவதியுற்ாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை த.மங்கப்பட்டி புதூரில் அவரது வயலருகே இருந்த புளியந்தோப்பில் பூச்சி மருந்து குடித்து உயிருக்குப் போராடினாா். அவரை மீட்டு ஆத்தூரிலும், சேலத்திலும் உள்ள தனியாா் மருத்துவமனையில் உறவினா்கள் சிகிச்சை அளித்தனா்.
இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
