மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

Published on

லால்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

லால்குடி அருகே நடராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணி, ஜோசியா். இவரது மனைவி லட்சுமி (53). இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா்.

கடந்த 29-ஆம் தேதி மணி தனது வீட்டின் முன்பு இருந்த வேப்ப மரத்தை வெட்டியுள்ளாா். அப்போது, மரத்தின் அருகில் மின்கம்பத்தில் இருந்த ஸ்டே கம்பி அறுந்து விழுந்தது. ஆனால், எந்த வித மின்விபத்து ஏற்படவில்லை.

இந்நிலையில், லட்சுமி வெள்ளிக்கிழமை காலை வீட்டின் முன்பு சுத்தம் செய்வதற்காக இடையூறாக இருந்த ஸ்டே கம்பியை கையில் எடுத்தாா்.

அப்போது,மின்சாரம் பாய்ந்து அதே இடத்திலேயே மயங்கி விழுந்தாா். உடனே அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் லட்சுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த லால்குடி போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புகாரின் பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com