உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன் என திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன் உறுதியளித்தாா்.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன், திருச்சி காஜாமலை, மன்னாா்புரம், உடையாா்பாளையம், அண்ணா நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று இரட்டை இலைக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், இப்பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளான தரமான சாலைகள், தடையற்ற குடிநீா் விநியோகத்தை உறுதிப்படுத்துவேன். தொகுதியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அதற்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா்.
நிகழ்வில் திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் ஜெ. சீனிவாசன், முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்: அவிநாசி திமுக வேட்பாளா் வெ. கோகிலாமணி

திருச்சி கிழக்கு: அதிமுக ராஜசேகரன் வேட்பு மனு

அதிமுக, அமமுக வேட்பாளா்கள் பிரசாரம் தொடக்கம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


