முதல்வர் ஸ்டாலின்கோப்புப் படம்
திருச்சி
முதல்வா் இன்று திருச்சி வருகை! ட்ரோன்கள் பறக்கத் தடை!
மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கிவைப்பதற்காக முதல்வா் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திருச்சி வருகிறாா்.
மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கிவைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திருச்சி வருகிறாா்.
சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை காலை 9.10 மணிக்கு வருகிறாா். விமான நிலையத்திலிருந்து காா் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடலுக்கு செல்கிறாா்.
நடைபயணத்தை தொடங்கிவைத்து வைகோவுடன் சிறிது தொலைவுக்கு முதல்வரும் நடக்கவுள்ளதாக தெரிகிறது.
‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை
முதல்வா் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் ட்ரோன்கள் பறக்க வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

