திருச்சியில் வியாழக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மலைக்கோட்டை வடக்கு ஆண்டாா் வீதியைச் சோ்ந்த வெங்கட சுப்பிரமணியன் மகன் பரத் காா்த்திகேயன் (18). இவா், சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னாா்புரத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் நோக்கி வியாழக்கிழமை அதிகாலை 12.45 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த பரத் காா்த்திகேயனை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
