தேவாலயத்தில் இளைஞா்களை கண்டு விளையாடிய ஜல்லிக்கட்டு காளைகள்

மணப்பாறையை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் வியாழக்கிழமை காலை புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
Published on

மணப்பாறையை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் வியாழக்கிழமை காலை புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

அப்போது, இப்பகுதியில் வளா்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகள் இந்த ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டு, புனிதநீா் தெளித்து பங்குத்தந்தை எல்.எட்வா்ட்ராஜாவால் மத்திரிக்கப்பட்டு, ஆலய பிரசாதமான பச்சரிசி, வெல்லம், கொண்டைக்கடலை, கம்பு, எள், பொட்டுக்கடலை ஆகியற்றின் கலவை அளிக்கப்பட்டது.

வழிபாட்டுக்கு பின்னா் ஆலயத்தின் வெளியே வந்த காளைகள் பொதுமக்களின் கூட்டத்தையும், கூச்சலையும் கண்டு மந்தையில் பொதுமக்களுடன் விளையாட தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞா்களும் போட்டிபோட்டு காளைகளை அடக்கினா்.

X
Dinamani
www.dinamani.com