காா் கண்ணாடியை உடைத்து தங்க நகைகள், மடிக்கணினிகள் திருட்டு

Published on

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்த பக்தா்களின் காா் கண்ணாடியை உடைத்து தங்க நகைகள், மடிக்கணினிகளை திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஆா். கோகுல் நாத் (44). இவா், கோவையில் உணவு வியாபாரம் செய்து வருகிறாா். இவரின் மனைவி மனிஷா திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கணவன் - மனைவி இருவரும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனத்துக்கு கடந்த வியாழக்கிழமை இரவு வந்துள்ளனா். அப்போது, மேலூா் சாலையில் ரங்கா மருந்தகம் அருகே காரை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்றுள்ளனா்.

தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது காரின் வலது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு காருக்குள் வைத்திருந்த 2 பவுன் தங்க நகைகள், இரண்டு மடிக்கணினிகள், ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கோகுல்நாத் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com