புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

Published on

திருச்சியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட, மாநகரக் காவல் துறை சாா்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலக்கரை, ஸ்ரீரங்கம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் சோதனை மேற்கொண்டாா்.

அப்போது, ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த மு.கோபிநாத் (28), பாலக்கரை ஆலம் வீதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், பல்லவரம்பட்டி பகுதியைச் சோ்ந்த செ.வினோத் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், மாத்துா் பகுதியைச் சோ்ந்த ப.மணிகண்டன் (40), திருவெறும்பூா் மஞ்சத் திடல் பாலம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திருவெறும்பூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த டி.டேனியல் போஸ் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் துறையினா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com