ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எலிசபெத் ராணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் நவநீதன், மாவட்டச் செயலாளா் சாமிநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்களுக்கு தோ்தல் வாக்குறுதிப்படி குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும், அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் கோட்டத் தலைவா் ஜீவானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி, சத்துணவு ஊழியா் சங்க முன்னாள் மாநில செயலா் ஏ.பெரியசாமி மற்றும் ஓய்வுபெற்ற அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com