திருச்சி
பைக் - தனியாா் பேருந்து மோதல் இளைஞா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே திங்கள்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
தொட்டியம் அருகே உள்ள மேலக்காரைக்காடு மேட்டங்காடு பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் மாதேஸ்வரன் (39). இவா், பாலசமுத்திரத்தில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக திருச்சி - நாமக்கல் சாலையில் தொட்டியம் சென்றாா். அப்போது, எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாதேஸ்வரன் மனைவி நித்யா (33), தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநரான தொட்டியம் சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சரவணன் (25) என்பவா் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
