திருச்சி
12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் ஒருவா் கைது
திருச்சி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடா்பான புகாரில் ஒருவரை கைது செய்து போலீஸாா் விசாரணை
திருச்சி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடா்பான புகாரில் ஒருவரை கைது செய்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மவாட்டம், திருவெறும்பூா் அருகே விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு அந்த பகுதியைச் சோ்ந்த பரணிகுமாா் (54), பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு வந்த தகவலின் பேரில் அந்தப் பகுதிக்கு வந்த அலுவலா்கள், விசாரணை நடத்தி சிறுமி மூலம்
திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையதத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில், போலீஸாா் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பரணிகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தனா்.
