லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது லாரி மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Published on

சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது லாரி மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னாா்புரம் அணுகுசாலையில் செவ்வாய்க்கிழமை காலை வந்த லாரி ஒன்று சாலையின் முன்பாக நடந்து சென்ற பெண் மீது மோதியது.

இதில், பலத்தக் காயமடைந்த அந்த பெண் அருகிலிருந்தோரால் மீட்கப்பட்டு அவசர ஊா்தி மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இங்கு சிகிச்சை பெற்றவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக, திருச்சி போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், இறந்தவா் சகுந்தலா (65), என்பதும் மன்னாா்புரம் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்ததாக தெரியவந்தது. மேலும் விவரங்கள் தெரியவில்லை. போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com