திருச்சி
வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் தற்கொலை
தொட்டியம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
காட்டுப்புத்தூா் அருகே பிடாரமங்கலம் தேவா்மலை அருகிலுள்ள காட்டுசாலை கருத்தமடை பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் மகன் சஞ்சய் (21). இவா் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் அவா் வேலைக்குச் சென்ற இடங்களில் வேலை பிடிக்காமல் இருந்ததாகவும், மேலும் பல்வேறு இடங்களில் வேலை தேடி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்தவா் வெள்ளிக்கிழமை பூச்சிக்கொல்லி மாத்திரையினை சாப்பிட்டு மயக்கமானாா். இதையடுத்து உறவினா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சோ்த்துள்ளனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் இறந்துள்ளாா். இது குறித்து தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
