அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து

ரயில்கள் பகுதியாக ரத்து - பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 4:06 am IST

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி-காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 15, 16, 17, 18, 20, 21 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 15, 16, 17, 18, 20, 21 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56700) வரும் 15, 16, 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் ஆடுதுறை - மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - ஆடுதுறை வரை மட்டுமே இயங்கும்.

மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 15, 16, 17,18, 19, 20 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை - ஆடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது ஆடுதுறை - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.