தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டுவதை ஊக்குவிக்க அரசு மானியம்: ஆட்சியர்

அரியலூர் மாவட்ட கிராமப் பகுதிகளில் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டுவதை ஊக்குவிக்க அரசு
Updated on
1 min read

அரியலூர் மாவட்ட கிராமப் பகுதிகளில் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டுவதை ஊக்குவிக்க அரசு மானியம் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என்றார் ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தை திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமில்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் 2015-16 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் 15 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 14000 கழிப்பறைகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 16000 கழிப்பறைகளும் 2015-16 ஆம் ஆண்டில் கட்டப்படும். ஒவ்வொரு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கும் தகுதி வாய்ந்த பயனாளிக்கு ரூ. 12,000 மானியம் வழங்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் தனிநபர் இல்லங்களில் கழிப்பறைகள் கட்டுவதற்கான தேவையினை உருவாக்குவது மற்றும் கட்டப்பட்ட கழிப்பறைகள் தொடர்ந்து உபயோகப்படுத்துவதை உறுதி செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்பு போன்றவைகளை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு  தனிநபர் இல்லக் கழிப்பறைக்கு ரூ. 300 ஊக்கத் தொகையாக இந்த அமைப்புகளுக்கு வழங்கப்படும்.

இப்போது ரூ. 12,000 மதிப்பில் கட்டப்படும் கழிப்பறைக்கான மானியத் தொகை இரண்டு தவணையாக விடுவிக்கப்படும். அடித்தளம் முடிந்த பிறகு முதல் தவணையும், கட்டி முடிக்கப்பட்டவுடன் அடுத்த தவணையும் வழங்கப்படும்.

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் சமூகம் சார்ந்த அமைப்புகளுக்கும், ஊராட்சிகளுக்கும், சிறந்த களப்பணியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com