"வள்ளுவரையும், வள்ளலாரையும் பற்றினால் நல்வாழ்வு'

நாள்தோறும் வள்ளுவரையும், வள்ளாலரையும் பற்றி பேசுவோருக்கு நல்வாழ்வு அமையும் என்றார் வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலைய தலைவர் ஊரன் அடிகளார்.

நாள்தோறும் வள்ளுவரையும், வள்ளாலரையும் பற்றி பேசுவோருக்கு நல்வாழ்வு அமையும் என்றார் வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலைய தலைவர் ஊரன் அடிகளார்.
அரியலூர் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலைய வளாகத்தில்,தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் அவர் மேலும் பேசியது:
கடந்த 19 ஆம் நூற்றாண்டில் வடலூரில் சத்தியஞானசபை,சத்திய தருமசாலை என இரண்டையும் உருவாக்கினார் வள்ளலார். தமிழகத்தில் வள்ளுவரையும்,வள்ளலாரையும் பற்றி பேசியவர்கள் வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர்.
வள்ளலார் வடலூர் வரும் முன்பே,அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்பே வடலூர், லிங்கத்தடிமேடு ஆகிய பகுதிகளில் சிவாலயம் இருந்துள்ளதாகத் தெரிகிறது. காலப்போக்கில் அவை சிதிலமடைந்ததாகத் தெரிகிறது. புனிதமான  இப்பகுதிகளில் வள்ளலார் சத்தியஞான சபை,வள்ளலார் கல்வி நிலையம் ஆகியவை உருவாக்கியுள்ளார். அருட்செல்வமும் பொருட்செல்வமும் நிரம்பப் பெற்ற இத்தகைய உயர்ந்த மேடையில் ராமலிங்க வள்ளல் ஆன்மநெறிக் கழகம் தொடங்கப்படுகிறது. கல்வி நிலையங்கள் உருவாக்கியதில் முருகானந்த அடிகளாரின் பங்கும் குறிப்பிடத்தக்கது என்றார் அவர். முன்னதாக அவர் நாவுக்கரசர் சோ. சத்தியசீலன் எழுதிய இலக்கியம் பேசும் இலக்கியம் என்ற புத்தகத்தை வெளியிட, தொழிலதிபர் அக்பர் ஷெரீப் பெற்று கொண்டார். சோ.சத்தியசீலன் ஏற்புரையாற்றினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தமிழ்த் துறை தலைவர் அரங்க பாரி புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். வள்ளலாரும் தமிழ் பண்பாடும் என்ற தலைப்பில், தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி பேசினார். விழாவுக்கு வள்ளலார் கல்வி நிலைய தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com