அரியலூர் மாவட்டம் ஆட்சியரக அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் ரூ.52 லட்சத்து 77 ஆயிரத்து 981 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் பங்கேற்று, அரியலூர் மாவட்டத்துக்குட்பட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களில் கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ் 9 விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்காக மானியத்தொகையும், மேலும் 3 டிராக்டர், 1 மினி டிராக்டர், 5 சுழற்கழப்பை, 13 பவர் டில்லர் என 22 வேளாண் இயந்திரங்கள் என ரூ. 52 லட்சத்து 77 ஆயிரத்து 981 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஜயங்கொண்டம் எம்எல்ஏ.ராமஜெயலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கே. லோகேஷ்வரி, வேளாண் துணை இயக்குநர் பழனிசாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அன்புராஜன், வேளாண் அலுவலர் வடிவேல் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடக்ககூடாது: ப.சிதம்பரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

