காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த காணிக்கைபுரம் ரயில்வே கேட் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம், ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஆகியோர் சார்பில் கால்நடைகளுடன் மனிதச் சங்கிலி போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நெப்போலியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர்வரப்பிரசாதம், மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்டத் தலைவர் மணியன், துணைத் தலைவர் பிச்சைப்பிள்ளை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாம்பசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இரும்புலிக்குறிச்சி கிராம மக்கள் உண்ணாவிரதம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இரும்புலிக்குறிச்சி கிராமத்தில், அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தில், தமிழகத்துக்கு அரசியைத் தரும் டெல்டா மாவட்டம் செழிக்கவும், தமிழக மக்களின் பசியில்லாமல் வாழவும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு!
அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் எடை அதிகரிக்க...
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

