உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம் கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

அரியலூர், பெரம்பலூரில் எம்.ஜி.ஆர். நினைவுதினம்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் அவரது

Updated On :25 டிசம்பர் 2018, 9:34 am IST

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் அவரது சிலைகளுக்கும், உருவப்படத்துக்கும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும். அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில்   ஒற்றுமைத் திடலிலிருந்து  பெரம்பலூர்-அரியலூர் சாலை, கடைவீதி, மார்க்கெட் வீதி வழியாக அதிமுகவினர் அமைதியாக ஊர்வலமாகச் சென்று, பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் சிலை மற்றும்  பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில், மக்களவை உறுப்பினர் சந்திரகாசி,   ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம், அதிமுக நிர்வாகிகள் கல்லங்குறிச்சி  பாஸ்கர்,அரியலூர் நகர கூட்டுறவு சங்கத் தலைவர் ஓ.பி.சங்கர்,அரசு சிறப்பு வழக்குரைஞர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேமுதிக :  அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் கட்சியின் மாவட்டச் செயலர் ராம.ஜெயவேல் தலைமையில் அக்கட்சியினர் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுபோன்று ஜயங்கொண்டம்,தா.பழூர்,திருமானூர்,பொன்பரப்பி,ஆண்டிமடம்,செந்துறை,மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு  அதிமுக, தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூர் :  பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு
மாவட்ட அதிமுக செயலரும், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. 
மக்களவை உறுப்பினர்கள்  ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, நகர செயலர் ஆர். ராஜபூபதி, ஒன்றிய செயலர்கள் என்.கே. கர்ணன், பி. கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், அணிச் செயலர்கள் எம்.என். ராஜாராம், எம். வீரபாண்டியன், லட்சுமி, ராணி உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். இதுபோல, பெரியார் சிலைக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக, அமமுக, எம்ஜிஆர் கழகம், எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.