மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

பெரியாரின்  நினைவு நாளையொட்டி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசியல்

Updated On :25 டிசம்பர் 2018, 9:33 am IST

பெரியாரின்  நினைவு நாளையொட்டி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ரா.அய்யாசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோல, திராவிடர் கழகத்தினரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் தண்டபாணி,தேமுதிக மாவட்டச் செயலர் ராம.ஜெயவேல் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,எம்.ஜி.ஆர் கழகம்,விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
திருமானூர்,ஜயங்கொண்டம்,செந்துறை,தா.பழூர்,ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெரியார் சிலைக்கும் மற்றும் அவரது படத்துக்கும் பல்வேறு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பெரம்பலூர் :   பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு   நகரச் செயலர் எம். பிரபாகரன் தலைமையில் திமுகவினரும், மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமையில் திராவிடர் கழகத்தினரும்,  மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும்,  மாவட்டச் செயலர் சக்திவேல் தலைமையில் எம்.ஜி.ஆர்.கழகத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.